.webp)
Colombo (News 1st) பியல் மனம்பேரி எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பியல் மனம்பேரி தொடர்பான வழக்கு வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடிதுவக்கு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, சம்பத் மனம்பேரி என்பவருக்கு தங்குமிடம் வழங்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சரித் மதுசங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கு தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வழக்கு தினத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மித்தெனிய, தலாவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று(08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.