.webp)
Colombo (News 1st) இலங்கை ரக்பி அணியின் முன்னாள் தலைவர் பவித்ர பெர்னாண்டோ இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரக்பி சங்கத் தேர்தல் விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று(08) நடைபெற்றது.
இலங்கை ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 02 வீரர்களான பவித்ர பெர்னாண்டோ மற்றும் லசித குணரத்ன ஆகியோர் தலைவர் பதவிக்கு போடடியிட்டனர்.
தலைவர் மற்றும் பொருளாளர் பதவி தவிர்ந்த ஏனைய பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பிரதி தலைவராக சானிக பெர்னாண்டோ, உப தலைவராக சிந்தக பெரேரா, செயலாளராக சுகாஸ் ஜயதிலக, பெண்கள் பிரதிநிதியாக திலினி ரங்கனீ மற்றும் வீரர்களின் பிரதிநிதியாக ஸ்டீபன் கிரகரி ஆகியோர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.
பொருளாளர் பதவிக்கு நியோமால் ஏக்கநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.
36 க்கு 18 என்ற வாக்குகளின் அடிப்படையில் பவித்ர பெர்னாண்டோ இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.