சேகுவேராவின் 58ஆவது வருட நினைவு தினம்

சேகுவேராவின் 58ஆவது வருட நினைவு தினம்

by Staff Writer 08-10-2025 | 10:41 PM

Colombo (News 1st) தன்னிகரில்லாத போராளியாக மக்கள் மனதில் இடம்பிடித்த சேகுவேராவின்(Che Guevara) 58ஆவது வருட நினைவு தினம் இன்றாகும்.

ஆர்ஜென்டினாவில் பிறந்த எர்னஸ்டோ சேகுவேரா அனைத்து மனித குலத்தின் நலனுக்காக போராடிய ஒரு சர்வதேச புரட்சியாளராவார்.  

1928 ஜூன் 14ஆம் திகதி பிறந்த அவர் மருத்துவர், இலக்கியவாதி, போராளி, யுத்த வல்லுனர், இராஜதந்திரி எனும் பல பரிணாமங்களை தன்னகத்தே கொண்டிருந்தார்.

1967 ஒக்டோபர் 8ஆம் திகதி பொலிவியாவில் சேகுவேரா படுகொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்படுவதற்கு 08 ஆண்டுகளுக்கு முன்பு 1959 ஆகஸ்ட் 8ஆம் திகதி சேகுவேரா இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

அந்த பயணத்தின் போது அவர் நாட்டிய மஹோகனி மரம் தற்போது பாரிய விருட்சமாக காட்சியளிக்கின்றது.  

ஹொரணை யஹலகெல தோட்டத்தில் உள்ள சேகுவேரா நினைவுத்தூபிக்கு முன்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நினைவுதினம் இன்று(08) அனுஷ்டிக்கப்பட்டது. 

இலங்கைக்கான கியூப தூதுவர் அன்டேரெஸ் மர்ச்சலோ உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சோசலிச இளைஞர் சங்கத்தால் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.