.webp)
Colombo (News 1st) எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கலந்துரையாடலை ஏற்பாடு செய்யுமாறு சட்ட மாஅதிபர் திணைக்களம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வழக்கு தீர்ப்பின் மூலம் பல உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு தெரிவித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 361 பக்கங்களை கொண்டதாகும்.
இதனூடாக குறித்த கப்பல் நிறுவனம் மற்றும் அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கப்பல் விபத்தால் இடம்பெற்ற சுற்றுச்சூழல் பாதிப்பிற்காக ஒரு பில்லியன் டொலர்கள் இழப்பீடாக வழங்குமாறு கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
குறித்த முழுமையான இழப்பீட்டை பெறுவது தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.