.webp)
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 135 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த மாதம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை மற்றும் அதனை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்தது.
களுத்துறை மற்றும் பாணந்துறையில் கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற 2 கடைகளுக்கு கடந்த 2ஆம் திகதி தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
கீரி சம்பா அரிசியை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட கடைக்கு எதிராக 20,000 ரூபாஅபராதம் விதிக்கப்பட்டது.
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்து மறைத்து வைக்கும் வியாபாரிகளைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்தது.