நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

by Staff Writer 05-10-2025 | 6:13 AM

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று(05) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும்  ஊவா மாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.