சட்டவிரோதமாக இறக்குமதியான வாகனம் கண்டுபிடிப்பு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் கண்டுபிடிப்பு

by Staff Writer 05-10-2025 | 2:06 PM

Colombo (News 1st) சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, போலி தகவல்களைப் பயன்படுத்தி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஜீப் ரக வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடவத்தை பகுதியில் மத்திய குற்ற விசாரணை பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள மேலும் 20 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.