100mm-க்கு மேற்பட்ட பலத்த மழை

100mm-க்கு மேற்பட்ட பலத்த மழை

by Staff Writer 04-10-2025 | 3:42 PM

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், குருநாகல், மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழைபெய்யலாமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(04) பிற்பகல் விடுத்த சிவப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன்கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன் மின்னல் தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்பங்களில் கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.