.webp)
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு ஒருவரை கொலைசெய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் துப்பாக்கிதாரி பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்திய சந்தேகநபரே தெஹிவளை பஸ் நிலையத்திற்கு அருகில் 05 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 5 வாள்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கல்கிசையை சேர்ந்த 34 வயதுடையவரென தெரியவந்துள்ளது.
கடந்த ஜுலை 18ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அண்மித்து மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.