மத்தள விமானநிலைய வனவிலங்குகள் பிரச்சினைக்கு தீர்வு

மத்தள விமான நிலையத்தில் நிலவும் வனவிலங்குகள் பிரச்சினைக்கு தீர்வு

by Staff Writer 03-10-2025 | 6:43 PM

நாட்டின் விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் மூன்றாம் ஆண்டு மாநாட்டிற்கு இணையாக அமைப்பின் செயலாளர்  நாயகத்திற்கும் நாட்டின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் மாநாடு, 183 நாடுகளின் பிரதிநிதிகளுடன் கனடா - மொன்டிரியல் நகரில் நடைபெறுகின்றது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, துறைமுகம், விமான சேவைகள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் ருவன் கொடித்துவக்கு உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

மத்தள விமான நிலையத்தில் நிலவும் வனவிலங்குகள் பிரச்சினைக்கு தீர்வு வழங்க சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.