பாணந்துறை 2 துப்பாக்கிகள் மீட்பு

பாணந்துறை 2 துப்பாக்கிகள் மீட்பு

by Staff Writer 03-10-2025 | 6:41 PM

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நிலங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்ட தகவல்களுக்கமைய இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாணந்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மினி உஸி (Mini Uzi) ரக துப்பாக்கி மற்றும் கட்டுத்துப்பாக்கி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.