தரநிலைகளுக்கு உட்பட்ட தயாரிப்புகளுக்கு SLS தேவை

தரநிலைகளுக்கு உட்பட்ட தயாரிப்புகளுக்கு SLS தரச்சான்றிதழ் கட்டாயமென அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

by Staff Writer 02-10-2025 | 8:30 AM

Colombo (News 1st) தரநிலைகளுக்கு உட்பட்ட தயாரிப்புகளை SLS தரச் சான்றிதழ் இல்லாமல் தயாரித்தல், பொதி செய்தல், விநியோகித்தல், கொண்டு செல்லுதல், களஞ்சியப்படுத்தல் அல்லது விற்பனை செய்யக்கூடாதென அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த அதிவிசேட வரத்தமானி அறிவித்த விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அமலாகும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.