கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிச்சூடு

கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிச்சூடு

by Staff Writer 01-10-2025 | 3:26 PM

Colombo (News 1st) கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

நிட்டம்புவ உதம்மிட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா விசேட மோட்டார் சைக்கிள் பிரிவின் ஊடாக இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையிலிருந்த வேனின் சாரதி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் லேல்லவபிட்டிய மற்றும் இரத்தினபுரி பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 43 வயதுடையவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.