அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள், பயணிகள் ஆசனப்பட்டி அணிவதை அமுல்படுத்தி அதிவிசேட வர்த்தமானி

by Staff Writer 01-10-2025 | 9:35 PM

Colombo (News 1st) அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பயணிகளும் ஆசனப்பட்டி அணியும் விதிமுறையை அமுல்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களுக்கும் சாரதியின் ஆசனப்பட்டி, வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய நியமங்களைக் கொண்டிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்வரிசை ஆசனங்கள் உள்ளிட்ட ஏனைய ஆசனங்களில் பயணிக்கும் ஏனையோருக்கான ஆசனப்பட்டி அமைந்திருக்க வேண்டிய விதம் தொடர்பிலும் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்