ஹெரோயின், போதைவில்லைகளுடன் சந்தேகநபர் கைது

ஹெரோயின், போதைவில்லைகளுடன் சந்தேகநபர் மட்டக்குளியில் கைது

by Chandrasekaram Chandravadani 30-09-2025 | 3:28 PM

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் கொழும்பு மட்டக்குளி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் மட்டக்குளி - சிறிவர்தன வீதியில் சந்தேகநபர் நேற்று(29) கைது செய்யப்பட்டுள்ளார்.

சமித்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 33 கிலோ 270 கிராம் ஹசீஸ் போதைப்பொருள், 408 கிராம் ஹெரோயின், 200 போதைவில்லைகள் மற்றும் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த ஒருதொகை ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மட்டக்குளி பகுதியில் திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய ஒருவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.