சஷீந்திர ராஜபக்ஸ தொடர்ந்தும் விளக்கமறியலில்..

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ தொடர்ந்தும் விளக்கமறியலில்..

by Staff Writer 30-09-2025 | 3:03 PM

Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ எதிர்வரும் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மகாவலி அதிகார சபைக்குட்பட்ட செவனகல பகுதியிலுள்ள காணியில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள் அரகல போராட்டத்தின் போது சேதமாக்கப்பட்டதாக தெரிவித்து 88,50,000 ரூபா நட்டஈடு பெற்ற சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.