.webp)
Colombo (News 1st) வெலிகமையில் மோல்டோவா பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள் 'Mephedrone' எனும் அபாயகரமான போதைப்பொருள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரச இரசாயனப் பகுப்பாய்வாளரால் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டமைக்கு அமைய இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் நாட்டிற்குள் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார்.
தற்போது குறித்த போதைப்பொருள் ரஷ்யாவில் பாவனையில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
வெலிகம, சல்மல் உயன பகுதியில் குறித்த போதைப்பொருள் தொகையுடன் மோல்டோவா பிரஜை கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.