.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் Katsunobu Kato ஆகியோருக்கு இடையே ன இருதரப்பு பேச்சுவார்த்தை டோக்கியோ நகரில் நடைபெற்றது.
இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஜப்பான் உதவி /JICA ஒத்துழைப்பின் கீழ் தற்போது செயற்படுத்தப்படும் மற்றும் செயற்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை ஜனாதிபதி மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இருநாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விடயங்களில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதன்பின்னர் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களை ஜனாதிபதி சந்தித்தார்.