.webp)
Colombo (News 1st) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலா 01 மில்லியன் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் சந்தேகநபரை விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டமை குறித்த விசாரணைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(29) கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் குற்றவியல் அழுத்தம் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டார்.