பயணிகள் வருமானம் 10 வீதத்தால் அதிகரிப்பு

2025 - 2026 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் பயணிகள் வருமானம் 10 வீதத்தால் அதிகரிப்பு - ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்

by Staff Writer 28-09-2025 | 7:24 AM

Colombo (News 1st)   2025 முதல் 2026 வரையான நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பயணிகள் வருமானம் 10 வீதத்தால் அதிகரித்துள்ளது.

தமது விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் 22 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் விமான சேவையின் செயற்றிறன் 74 வீதமாக அதிகரித்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் இது 69 வீதமாக பதிவாகியிருந்தது.

இயந்திரக் கோளாறு காரணமாக நீண்ட காலமாக சேவையில் இருந்து நீக்கப்பட்ட 02 விமானங்கள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருட ஆரம்பத்தில் மற்றுமொரு விமானம் பழுதுபார்க்கப்பட்டு சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.