அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

மின்விநியோகம் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

by Staff Writer 22-09-2025 | 7:37 AM

Colombo (News 1st) மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுசேவைகள் சட்டத்தின்  2ஆம் இலக்க சரத்திற்கமைய  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.