.webp)
Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - பரந்தன் பிரதான வீதியில் வெள்ளப்பள்ளம் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் பிரதான வீதிக்கு பிரவேசிக்க முற்பட்ட போது மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 26 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.