வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் விசேட பிரிவு..

வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் புதிய விசேட விசாரணைப் பிரிவு..

by Staff Writer 19-09-2025 | 4:47 PM

Colombo (News 1st)இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் புதிய விசேட விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  

பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை விரைவுபடுத்துதல், முறைப்பாடுகளுக்கு செயற்றிறனுடன் தீர்வு வழங்குதல் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல் என்பன இந்தப் புதிய விசேட விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதற்கான நோக்கங்களாகும்.