.webp)
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கு புதிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்ட மாஅதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சட்ட மாஅதிபர் அறிவித்துள்ளார்.
புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமையின் மூலம் கடமையை செய்ய தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.