குருக்கள்மடம் வழக்கு விசாரணை இன்று(15)

குருக்கள்மடம் வழக்கு விசாரணை இன்று(15)

by Staff Writer 16-09-2025 | 5:59 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் 1990ஆம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று(15) நடைபெற்றது.

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி M.J.F.சப்னா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை மேலதிக பாதிக்கப்பட்ட தரப்பினராக சாட்சியம் வழங்குமாறு பொதுஅழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய செப்டம்பர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் 35 பேர் முன்னிலையாகி தமது குடும்பங்களை சேர்ந்த 39 பேர் காணாமலாக்கப்பட்டுள்ளதாக சாட்சி வழங்கியிருந்ததுடன் முறைப்பாட்டாளர்களாக இணைக்குமாறும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த விடயங்களை பரிசீலனை செய்த நீதிமன்றம் குறித்த நபர்களின் தரவுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னர் அவர்களை முறைப்பாட்டாளர்களாக இணைக்குமாறு உத்தரவிட்டது.