மித்தெனிய இரசாயனப் பொருட்களின் மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் - தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை

by Staff Writer 14-09-2025 | 11:44 AM

Colombo (News 1st) மித்தெனிய தோரயாய பகுதியிலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களின் மாதிரிகளில் பெரும்பாலனவை ஐஸ் எனப்படும் Methamphetamine அடங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை கடந்த வௌ்ளிக்கிழமை(12) மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டதாக தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

மித்தெனிய பகுதியில் உள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 05ஆம் திகதி குறித்த இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான பெக்கோ சமனிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய குறித்த இரசாயனப் பொருட்கள் மீட்கப்பட்டன.

ஏனைய செய்திகள்