.webp)
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது விண்வெளி திட்டத்தில் சீன பிரஜைகள் பணிபுரிய தடை விதித்துள்ளது
நாசாவில் ஒப்பந்ததாரர்களாகவோ ஆராய்ச்சிக்கு பங்களிக்கும் மாணவர்களாகவோ பணியாற்றி வந்த சீனாவைச் சேர்ந்தவர்கள், செப்டம்பர் 5ஆம் திகதி முதல் நாசாவின் அனைத்து அணுகலையும் இழந்து விட்டாதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு நாசாவின் வசதிகள், பொருட்கள் மற்றும் வலைதளங்களை அணுகுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக நாசா உறுதி செய்தது.
நாசா தனது தரவுகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்வதை அமெரிக்கா தடை செய்ததால் சீன விண்வெளி வீரர்கள் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விலக்கப்பட்டனர்.