சட்டவிரோதமாக 6 பாம்புகளை கொண்டுவந்த பெண் கைது..

சட்டவிரோதமாக 6 பாம்புகளை கொண்டுவந்த பெண் கைது..

by Staff Writer 12-09-2025 | 10:36 PM

சட்டவிரோதமாக 6 பாம்புகளை கொண்டுவந்த பெண் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக 6 பாம்புகளை தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து கொண்டுவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு(11) கைது செய்யப்பட்டார்.

விமான நிலைய சுங்க மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதான குறித்த பெண் கொழும்பு வாழைத்தோட்டத்தைச் சேர்ந்தவராவார்.