Calin Popular Awards 2025 : நியூஸ் ஃபெஸ்ட், சிரச TV, சிரச FM, Y FM, கம்மெத்தவிற்கு விருதுகள்

by Staff Writer 10-09-2025 | 10:24 PM

Colombo (News 1st) Calin Popular Awards 2025 விருது வழங்கல் விழா இன்று(10) இடம்பெற்றது.

இதன்போது நியூஸ் ஃபெஸ்ட், சிரச TV, சிரச Fm, Y FM மற்றும் கம்மெத்தவிற்கு பல விருதுகள்  கிடைத்தன.

தொலைக்காட்சி மற்றும் வானொலி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரபல படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆண்டு மூன்றாவது தடவையாகவும் Calin Popular Awards விருது விழா  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கலைஞர்கள் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் விழாவில் பங்கேற்றனர்.

ஆண்டின் ஜனரஞ்சக நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கான விருதை சிரச தொலைக்காட்சியின் ஜூலியா சொனாலி மற்றும் ஹேஷான் மல்லவ வென்றனர்.

ஆண்டின் பிரபல அரசியல் நிகழ்ச்சிக்கான விருதை சிரச தொலைக்காட்சியின் 'சட்டன' நிகழ்ச்சி வெற்றிகொண்டது.

ஆண்டின் ஜனரஞ்சக செய்தி வாசிப்பாளருக்கான விருது நியூஸ் ஃபெஸ்ட்டின் விந்தன பிரசாத் கருணாரத்ன வசமானது.

ஆண்டின் ஜனரஞ்சக பெண் செய்தி வாசிப்பாளருக்கான விருதை நியூஸ் ஃபெஸ்ட்டின் சரசி பீரிஸ் தனதாக்கினார்.

ஆண்டின் இளையோருக்கான தொலைக்காட்சி விருதை சிரச TV தனதாக்கியது.

ஆண்டின் பிரபல மனிதநேய பணிக்கான விருதை "கம்மெத்த" வென்றது.

ஆண்டின் ஜனரஞ்சக வானொலி அறிவிப்பாளருக்கான விருதை சிரச வானொலியின் பினோலி ஜயமாலி மற்றும் லக்மால் சிறிவர்தன ஆகியோர் வென்றனர்.

ஆண்டின் பிரபல வானொலி அறிவிப்பாளர்களுக்கான விருதுகளை Y FM-இன் அவிஷ்க்கா இந்துமினி மற்றும் இஷான் தேவேந்திர ஆகியோர் வென்றனர்.

ஆண்டின் பிரபல வானொலிக்கான விருது Y FM வசமானது.