கெஹெலிய மீதான வழக்கை மீள விசாரிக்க தீர்மானம்

கெஹெலிய குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை மீள விசாரிக்க தீர்மானம்

by Staff Writer 10-09-2025 | 10:50 PM

Colombo (News 1st) முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவரது மனைவி, 03 மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு ​மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று(10) தீர்மானித்தார்.

வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் இதுவரையில் கிடைக்கவில்லை என வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ மற்றும் சட்டத்தரணி கஞ்சன ரத்வத்தே ஆகியோர் தெரிவித்தனர்.

இதன்போது நீதிபதி, முறைப்பாட்டாளர் தரப்பிடம் அது குறித்து வினவியதுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்ததாக முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். 

விடயங்களை ஆராய்ந்த நீதிபதி வழக்கை எதிர்வரும் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தார்.