மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

by Staff Writer 07-09-2025 | 10:43 AM

Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் நேற்று(06) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு - பரந்தன் வீதியின் உடையார்கட்டு பகுதியில் 02 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

விபத்தில் 02 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் காயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி 22 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.