எல்ல - இராவணா எல்ல இடையே ஆபத்தான 10 இடங்கள்

எல்ல - இராவணா எல்ல இடையே ஆபத்தான 10 இடங்கள் - பதுளை மாவட்ட வீதி அதிகார சபை

by Staff Writer 07-09-2025 | 8:45 AM

Colombo (News 1st) எல்ல - வெல்லவாய வீதியின் எல்ல மற்றும் இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த இடங்கள் தொடர்பில் விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் S.S.ஹேன்னாயக்க தெரிவித்தார்.

அந்த வீதிகளின் இருபுறங்களையும் அவதானத்துடன் மீள கட்டமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் 26 கிலோமீட்டர் தூரம் கொண்ட வீதி மீள்கட்டமைக்கப்படவுள்ளது.

பதுளை மாவட்டத்தில் விபத்துகளை தவிர்ப்பதற்காக 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.