.webp)
Colombo (News 1st) தெங்கு செய்கையாளர்களுக்காக புதிய காப்புறுதி திட்டத்தை விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய உற்பத்தி, மீள் உற்பத்தி, உப உற்பத்தி போன்ற மானிய முறைகளின் மூலம் வழங்கப்படும் தென்னை விதையை 05 வருடங்கள் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்து பாதுகாக்கும் விதமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காப்புறுதி காலம் 15ஆவது நாளில் இருந்து 01 வருடம் வரை நடைமுறைப்படுத்தப்படும்.
காப்புறுதி தவணைக் கட்டணமாக ஒரு தென்னை மரத்திற்காக 67.50 ரூபா என்பதுடன் மொத்த காப்புறுதி 550 ரூபாவாக வழங்கப்படும்.
தெங்கு பயிர்ச்செய்கை சபை, விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபை ஆகியவற்றின் ஒன்றிணைந்த திட்டமாக இது அமைந்துள்ளது.
இந்த காப்புறுதி யோசனை முறை மூலம் வறட்சி, வெள்ளம், கனமழை, சூறாவளி, மண்சரிவு, காட்டு யானைகளின் தாக்கம், காட்டு மிருகங்களின் தாக்கம், மின்னல், பீடைகளின் தாக்கம் போன்ற நிலைமைகள் தெங்கு உற்பத்திக்கான காப்புறுதி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுகின்றன.