.webp)
Colombo (News 1st) 159ஆவது பொலிஸ் தினம் இன்றாகும்.
'சட்டத்தை பாதுகாப்போம், சமாதானத்தை போற்றுவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை பொலிஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
பொலிஸ் தினத்திற்கான பிரதான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பொலிஸ் களப்படை தலைமையகத்தில் இன்று(03) பிற்பகல் இடம்பெறவுள்ளது.
முதலாவது பொலிஸ் மாஅதிபரான ஸ்ரீமத் G.W.R.கெம்பல் முதல் இன்று வரை 37 பொலிஸ் மாஅதிபர்களின் கீழ் நாட்டில் அமைதியைப் பேணுவதற்கும் சட்டவாட்சியை நிலைநிறுத்துவதற்கும் இலங்கை பொலிஸ் கடமைகளை முன்னெடுத்திருந்தது.
போதைப்பொருள், திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுக்களின் நடவடிக்கைகள், பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்ற வன்முறை நடத்தைகளை கட்டுப்படுத்துதல் மற்றும் 24 மணித்தியாலமும் போக்குவரத்து கடமைகளைச் செய்வதற்கும் இலங்கை பொலிஸ் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு உகந்த சேவையை இலங்கை பொலிஸ் தற்போது வழங்கி வருகின்றது.