மாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

மாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

by Staff Writer 03-09-2025 | 3:31 PM

Colombo (News 1st) மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலைய ஊழியர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று(03) துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.