.webp)
Colombo (News 1st) மத்திய அதிவேக வீதியின் 41ஆவது கிலோமீட்டர் பகுதியில் லொரி - பௌசர் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் லொரியின் சாரதி மற்றும் பௌசர் சாரதியின் உதவியாளருமே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகலிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த லொரி இன்று(03) அதிகாலை பௌசருடன் மோதி 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.