.webp)
Colombo (News 1st) Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 04 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.நெடுந்தீவினருகே கடந்த 4ஆம் திகதி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.