.webp)
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தமது வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர் நேற்று(30) மாலை அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
அனுமதி கோரிக்கையை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம்(29) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலின் போது நகர சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.