இலஞ்சம் கோரிய கலால்வரி திணைக்கள அதிகாரிகள் கைது

சந்தேகநபரை விடுவிக்க இலஞ்சம் கோரிய கலால்வரி திணைக்கள அதிகாரிகள் கைது

by Chandrasekaram Chandravadani 31-08-2025 | 1:52 PM

Colombo (News 1st) சந்தேகநபரை விடுவிப்பதற்காக இலஞ்சம் பெற முயன்ற கலால்வரி திணைக்களத்தின் 03 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட மாகாண குற்ற விசாரணை பிரிவினர் யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞரை விடுவிப்பதற்காக அவரின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து 20 இலட்சம் ரூபாவை குறித்த அதிகாரிகள் இலஞ்சமாக கோரியுள்ளார்.

இது தொடர்பில் குறித்த இளைஞனின் குடும்பத்தினர் செய்த முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கலால்வரி திணைக்கள அதிகாரிகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

ஏனைய செய்திகள்