வெல்லம்பிட்டியிலுள்ள ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு..

வெல்லம்பிட்டியிலுள்ள ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு..

by Staff Writer 25-08-2025 | 5:59 PM

வெல்லம்பிட்டி கித்தம்பஹுவ பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இன்று அதிகாலை பதிவானது.

குறித்த பகுதியிலுள்ள ஹோட்டலொன்றின் அறையொன்றுக்கு சென்ற 03 பேர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எவ் .யூ. வூட்லர் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச்சூட்டினால் உயிர் சேதமோ பொருட் சேதமோ பதிவாகவில்லையென அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.