மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் அதிகரிப்பு..

இலங்கையின் பல இடங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் அதிகரிப்பு..

by Staff Writer 24-08-2025 | 6:01 PM


நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மனித உடலினால் உணரக்கூடிய வெப்பநிலை கவனம் செலுத்தக்கூடிய மட்டத்தில் காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் இந்த நிலைமை காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸுக்கு இடையே பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.