பேலியகொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

பேலியகொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

by Staff Writer 19-08-2025 | 5:09 PM

பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15 அளுத்மாவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இன்று(19) முற்பகல் 9.30 அளவில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்தனர்.

மீன்சந்தையில் பணிபுரியும் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது வீதியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவரும் காயமடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவர் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறினர்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் இரு குழுக்களுக்கிடையே நீண்ட காலமாக நிலவும் மோதலின் விளைவாக மீன் சந்தையின் ஊழியரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக சில பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.