மின்சார சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுப்படுத்தினார்

இலங்கை மின்சார (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுப்படுத்தினார்

by Staff Writer 19-08-2025 | 5:10 PM


 

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு, சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்ன இன்று(19) சான்றுரைப்படுத்தியுள்ளார்.

இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் கடந்த 06ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வலு மீதான தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக தேசிய மின்சாரக் கொள்கையை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு இடமளிப்பது இந்த சட்டத்தின் நோக்கமாகும்.

இந்த சட்டத்தினூடாக தேசிய மின்சார மதியுரை பேரவைக்கு பதிலாக மின்வலு மீதான தேசியக் கொள்கையின் பாகமொன்றாக தேசிய மின்சாரக் கொள்கையை தயாரிப்பதற்கு இதன் ஏற்பாடுகள் இடமளிக்கும்.

“மொத்த விற்பனை மின்சாரச் சந்தை” என்பது “தேசிய மின்சாரச் சந்தை” என மாற்றப்படுவதுடன் வினைத்திறனான மற்றும் செலவுச் சிக்கனமான மின்சார விநியோகத்தை தொடர்ச்சியாகப் பேணுதல், பச்சைவீட்டு வாயுவின் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஊக்குவித்தல் ஆகியன இந்த சட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.