.webp)
Colombo (News 1st) கலென்பிந்துனுவெவ கெடலாவ வாவியிலிருந்து T-56 ரக துப்பாக்கிக்கான 5,036 தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
118 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில் வெலிபன்ன பகுதியில் கைத்துப்பாக்கிக்கான 46 தோட்டக்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.