புதிய பொலிஸ் மாஅதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்..

புதிய பொலிஸ் மாஅதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்..

by Staff Writer 13-08-2025 | 5:30 PM


புதிய பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுளளார்.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று(13) பிற்பகல் வழங்கப்பட்டது.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 61 ஈ (ஆ) சரத்தின்படி அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கை பொலிஸ் சேவையின் 37 ஆவது பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்ரபள், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய 03  பதவிகளையும் வகித்து பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட முதலாவது பொலிஸ் மாஅதிபராக வரலாற்றில் முதன்முறையாக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இடம்பிடித்துள்ளார். 
 

ஏனைய செய்திகள்