.webp)
Colombo (News 1st) அனைத்து வகையான சுரங்க அனுமதிப்பத்திரங்களையும் Online ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலத்தில் அனைத்து சுரங்க அனுமதிப்பத்திரங்களையும் Online ஊடாக மாத்திரமே பெற்றுக்கொள்ள வேண்டும் என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் S.N.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சுரங்கப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களை வரைபடமாக்கி தரவுத்தளம் தயாரிக்கப்படவுள்ளது.
இதனூடாக அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளும் அனுமதிப்பத்திரத்துடன் இடம்பெறுகிறதா என்பது தொடர்பில் எந்நேரத்திலும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பிருப்பதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.