கைவிடப்பட்டிருந்த மீனவர் ஓய்வூதிய திட்டம் மீண்டும்

கைவிடப்பட்டிருந்த மீனவர் ஓய்வூதிய திட்டம் மீண்டும்..

by Staff Writer 13-08-2025 | 1:55 PM

Colombo (News 1st) கைவிடப்பட்டிருந்த மீனவர் ஓய்வூதிய திட்டம் அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் மீள ஆரம்பிக்கப்படுமென கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

தகுதியானவர்களை அடையாளங்காணும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆரச்சி குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தை விவசாய அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியன இணைந்து மீள ஆரம்பித்துள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.