முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிடியாணை

by Staff Writer 12-08-2025 | 6:33 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு உத்தரவிட்டு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று(12) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வு வேலைத்திட்டத்தை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கி அரசாங்கத்திற்கு 02 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை ஆராய்ந்த மேலிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக அப்போதைய கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன பெயரிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சார்பில் ஆஜரான உதவி சட்ட பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.