.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கொடிகாமம், எழுதுமட்டுவாழ் பகுதியில் இன்று(12) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் கொடிகாமம் பகுதியை சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.