விஜயபுரவில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு

விஜயபுரவில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு

by Staff Writer 11-08-2025 | 12:26 PM

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜயபுர பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று(11) மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வாரியபொல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் குறித்த வீட்டில் தனிமையில் வசித்து வந்தவரெனவும் சில நாட்களாக வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அயலவர்கள் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, வீட்டின் உரிமையாளர் கட்டிலில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.